Jithu Jilladi Mitta Killadi
Theri
Hero Vijay
Music Director Gv prakash
Lyricist Rokesh
Singers Devaa,Balachandra Menon
Year 2016
Song Lyrics

ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி
மாமா டால் அடிக்கும் கலரு கண்ணாடி

ஏ அட்டக்கு முட்டக்கு அலரடிக்குது
போலீஸ்காரன் கிப்சி தேவையில்ல எஃபசி
காக்கி யுனிப்பாமு போட்டா தானா வரும் பாமு
தொப்பியில்லா சிங்கத்த பாறேன்
தோளில ஸ்டார வாங்கும் போலீஸ்காரன் (ஜித்து)

ஊடு பூரும் உட்டாலாக்கடி
கேடிக்கெல்லாம் கேடி
அட டிமிக்கு கொடுக்கும் ஆள
ஜோக்கா புடிச்சிடுவோம் தேடி
உன்ன போல ஆள அடிக்க எடுக்கணும் பிரம்ப

ஒண்ணு வெச்சாதான்டா
தப்பு செய்ய தோணாது திரும்ப
போற வர்ற பொண்ணுங்கள
எங்கண்ணா நீ தொட்டா.
உன் கையை ஒடைச்சி போட்டுடுவேன்
புத்தூர் மாவு கட்ட

சூப்பர் மேனு ஸ்பைடர் மேனு எல்லாமே சினிமா
நீ கொரலு கொடுத்தா காக்க வரும் காக்கி துணிமா
ரவுண்ட்ஸு வந்தாதான் நாங்க நைட்டுல
நிம்மதியா தூங்குவ நீ உங்க வீட்டுல
தேடினு ஓடி வர உனக்கு தொல்ல நான்
என்ன பண்ணுவ நீ போலீஸ் இல்லன்னா (ஜித்து)

சிக்கல் வந்தா செதர போலீஸ் நார்மல் பர்சனா
நீ மாமான்னு கூப்பிட போலீஸ்
என்ன உங்க அக்கா புருசனா
காவு வாங்க காத்துனு இருக்கும் ரோட்டுல மேடு
உனக்கு உயிர் மேல ஆச இருந்தா ஹெல்மட்ட போடு

டிடி கேசுல மாட்டிகின்னு பீசியாண்ட கெஞ்ச
அவன் கேக்காமலே குடுப்ப நீயும் ஈஸியான லஞ்சம்
செஞ்ச தப்ப மறக்க நீயும் கொடுக்குற துட்ட
உனக்கு தகுதி இல்ல என்னைக்குமே போலீஸ திட்ட

காக்கி சட்ட முன்ன எதுவும் பெரிசு இல்ல
பொண்டாட்டி புள்ள பாசம் போட்டோவா பர்சுல
நல்ல நாளுலையும் வீட்டுல தங்கல
கொண்டாட முடில நாங்க தீபாவளி பொங்கல (ஜித்து)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY