Lalalala Law Mudichom
Tamizhan
Hero Vijay
Music Director D.imman
Lyricist Vairamuthu
Singers Sankar Mahadevan,G.K. Lavanya
Year 2002
Song Lyrics

லலலாலல லா முடிச்சோம்
லலலாலால லவ் படிப்போம்

காதல் வளர்க்கும் கட்சியை ஆதரிப்போம்
பட்டம் வாங்கும் வயசெமக்கு
பட்டம் விடத்தான் மனசிருக்கு
பறவை கூட்டில் சில நாள் வாழ்ந்திருப்போம்

ஹே அட காலேஜு முடிந்ததும்
நம் கால் ஏஜே முடிந்தது
இந்த வயதோடு சிந்து பாடாமல்
எந்த வயதோடு வாழ்வது

அட எக்ஸாம்சும் தீர்ந்தது இனி
என்கேஜ்மன்ட் தேடுது
லைசன்ஸ் இல்லாத யார பார்த்தாலும்
லவ்வர் இவளென்று தோணுது.....(லாலால)

நான்கே திசைகள் ஆனால் என்ன
நாற்பதினாயிரம் வழியிருக்கு
ஐந்தே புலன்கள் ஆனால் என்ன
ஆயிரம் இன்பம் இருக்கு

மனமே சிறகாய் ஆனவனுக்கு
வானும் மண்ணும் திறந்திருக்கு
நெற்றியில் மூளை உள்ளவனுக்கு
நிலவில் வீடிருக்கு

அட மண்ணில் உள்ள பொருள் என்ன
என்னவென்று செயற்கை கோள்கள் தேடும்
ஓரு பெண்ணில் உள்ள பொருள் என்ன
என்னவென்று எங்கள் கண்கள் தேடும்

சல்வாரை கண்டவுடன்
தயக்கம் வேண்டாம் சல்யூட் அடித்துவிடு
கண்களிலே சிறிதேனும் காதல் தெரிந்தால்
காலில் விழுந்துவிடு..............(லாலாலா)

கொஞ்ச கொஞ்சம் குறைகள் பிழையில்லாமல்
மனிதன் வாழ்வு நிறையாது
சொக்கத் தங்கம் அதிலே
செம்பு சேராமல் அதிசயம் முடியாது

சின்ன சின்ன அத்துமீறல் இளமையில் இருக்கும்
அதிலே கொலை குற்றம் கிடையாது
மன்னிக்கிற வேலை மட்டும்
இல்லாமல் போனால் கடவுள் கிடையாது

அட கொஞ்சம் மலர் பார்த்து
கொஞ்சம் கலர் பார்த்து வாழ்ந்தால் என்ன பாவம்
பொன் வண்டு தீண்டாத தென்றல்
தாண்டாத பூவுக்கென்ன லாபம்

உலகம் வானவில்லை தோரணம் ஆக்கி
வாசலில் சிரிக்கிறதே
வல்லவனே இன்று முதல் வென்றிடு என்று
வாழ்க்கை அழைக்கிறதே...(லாலாலா)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY