Unnai Velvaai Tamizha
Tamizhan
Hero Vijay
Music Director D.imman
Lyricist Vairamuthu
Singers Karthik
Year 2002
Song Lyrics

தமிழா தமிழ் தமிழா தமிழ் தமிழா
தமிழா தமிழ் தமிழா தமிழ் தமிழா

உன்னை வெல்வாய் தமிழா
உலகை வெல்வாய் தமிழா
இமய மலையை இடுப்பில் கட்டி
இழுத்து வருவாய் தமிழா…..(தமிழா)

தங்க வயல்களும் வெள்ளி நதிகளும்
தமிழன் நாட்டில் வரவேண்டும்
காற்றும் மழையும் தமிழன் சொன்னால்
கைகள் கட்டி தொழ வேண்டும்
செவ்வாய் கிரகம் வரையில் தமிழன்
செல்வாக்கெல்லாம் பெறவேண்டும் வேண்டும்

வாயை கட்டி வயிற்றை கட்டி
வரியை கட்டுகிறாய் – அந்த
வரிகள் எங்கே வழிகிறதென்னும்
வழிகள் அறிவாயா

பட்டு வேட்டிகள் வாங்கித் தரவே
சுதந்திரம் வந்ததடா – ஆனால்
கட்டி இருந்த கோவணம் கூட
களவு போனதடா

கருப்பு கோழி காணோமென்று
காவல் நிலையம் போன மகள்
கற்பை காணோம் காணோமென்று
கதறிக் கொண்டு திரும்புவதோ

ஜனாதிபதியும் ரிக்க்ஷாக்காரனும்
சட்டத்தின் முன் ஒருவரடா
ஊமை ஜனங்கள் உரிமை பற்றி
உணரச் செய்வது கடமையடா

சத்தியம் காக்க போராடு
சட்டம் தெரிந்து வாதாடு
சுற்றிச் சூழும் சூழ்ச்சி முறித்து
வெற்றிக் குளத்தில் நீராடு........(தமிழா)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY