Pattampoochi Kooppidum
Kaavalan
Hero Vijay
Music Director Vidyasagar
Lyricist Kapilan
Singers K.K.,Rita
Year 2011
Song Lyrics

பட்டாம்பூச்சி கூப்பிடும்போது பூவே ஓடாதே
காதல் தேனை சாப்பிடும்போது பேசக்கூடாதே
யானை தந்தத்தின் சிலை நீயே
தினம் ஏறும் தங்கத்தின் விலை நீயே
காதல் வீசிய வலை நீயே
எனைக்கட்டி இழுத்தாயே.......(பட்டாம்பூச்சி)

எதைத்தருவது நான் என்று
எதைப் பெறுவது தான் என்று
குறுக்கும் நெடுக்கும் குழந்தைப் போல
இதயம் குதித்தோட

தலை அசைக்கிது உன் கண்கள்
தவித்தவிக்கிது என் நெஞ்சம்
ஒருத்திப் போல ஒருத்தி வந்து
உயிரைப் பந்தாட

ஞாபகம் உன் ஞாபகம்
அது முடியாத முதலாகும்
பூ முகம் உன் பூ முகம்
அது முடியாத முதல் பாகம்

பெண் கவிதை இவள்தானே
பொன் இதழால் படிப்பாயோ
கண் இமையால் எனை மூடி
காதல் திறப்பாயோ.........(பட்டாம்பூச்சி)

அலை வரிசையில் நீ சிரிக்க
தொலைத் தொடர்பினில் நான் இருக்க
உதடும் உதடும் பேசும் பொழுது
உலகை மறந்தேனே

உனதருகினில் நான் இருக்க
உயிர் குளத்தினில் பூ முளைக்க
இரண்டாம் முறையாய் இதயம் துடிக்க
புதிதாய் பிறந்தேனே

மாலையில் பொன் மாலையில்
உன் மடிமீது விழுவேனே
மார்பினில் உன் மார்பினில்
நான் மருதாணி மழைதானே

வெண்ணிலவோ நெடுந்தூரம்
பெண் நிலவோ தொடும் தூரம்
உன் மழையில் நனைந்தாலே
காய்ச்சல் பறந்தோடும்....(பட்டாம்பூச்சி)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY