Molachu Moonu Elai
Velayudham
Hero Vijay
Music Director Vijay antony
Lyricist Viveka
Singers Prasanna,Supriya Joshi
Year 2011
Song Lyrics

மொளச்சு மூணு எலையே விடல
கருவா மொளகா அழகி வெடல
வெரலு வெண்டக்கா உன் காது அவரைக்கா
மூக்கு மொளகா மூக்குத்தி கடுகா
கனிந்த காய் தோட்டம் நீதானா.....(மொளச்சு)

வயசோ பதினஞ்சு அடி வாடி மாம்பிஞ்சு
பாவம் என் நெஞ்சு என்ன பார்த்து நீ கொஞ்சு
பார்வை திருப்பாச்சி உன் தீண்டல் நெருப்பாச்சு
உன்ன பார்த்தாலே என் பகலும் இரவாச்சு

ஹே கன்னாபின்னான்னு நீ அழகா இருக்குறியே
கண்கள் என்னும் வாணலியில் என்ன பொறிக்கிறியே
இமைகள் மூடாமல் கொஞ்சல் பார்வை பாக்குறியே
அஞ்சு நொடியில் நெஞ்சு குழியில் என்ன பொதைக்கிறியே

ஒடம்பெல்லாம் மச்சக்காரி உசுபேத்தும் கச்சைகாரி
இதமான முத்தக்காரி மோசக்காரி
ஒடம்பெல்லாம் மச்சக்காரா உசுபேத்தும் கச்சகாரா
இதமா முத்தக்காரா மீசைக்காரா....(மொளச்சு)

சிரிப்பு கல்கண்டு உன் சிணுங்கல் அணுகுண்டு
விழிகள் கருவண்டு அடி விழுந்தேன் அதை கண்டு
உனது நகம் கீறி என் உடம்பில் தழும்பேறி
அலறும் நாள் தேடி என் ஆவல் பெருசாச்சு

ஹே தினுசு தினுசாக தெனம் கனவில் தோணுறியே
உடைய திருப்பி உசுர வருத்தி படுத்தி எடுக்குறியே
முழுசு முழுசாக என்ன முழுங்க நெனைக்கிறியே
ஒடம்ப முறுக்கி வளையல் நொறுக்கி கதைய முடிக்கிறியே

மேடான பள்ளதாக்கே மிதமான சூறைக் காற்றே
புரியாது என்ன கொன்ன முத்த சூடே
காதோரம் காதல் பேசி அழகான அரிவாள் வீசி
உயிரோடு உயிரின் பேச்சே ஏதோ ஆச்சே..(மொளச்சு)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY