Nalla Perai Vanga
Namnadu
Hero MGR
Music Director M.S.Viswanathan
Lyricist Vali
Singers T.M.Soundarajan
Year 1969
Song Lyrics

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

நம் நாடு எனும் தோட்டத்திலே

நாளை மலரும் முல்லைகளே

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே


பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்

அறிவூட்டும் தந்தை நல் வழிகாட்டும் தலைவன்

துணையாக கொண்டு நீ நடை போடு இன்று

உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று

உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று (நல்ல)


கிளி போல பேசு இளங்குயில் போல பாடு

மலர் போல சிரித்து நீ குறள் போல வாழு

மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம்

மெய்யான தெய்வீகமாகும் (நல்ல)


விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்

தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்

ஜனநாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர்

தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்

தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார் (நல்ல)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY