Thannilavu Theniraikka
Padithal Mattum Pothuma
Hero Sivaji Ganaesan
Music Director Viswanathan Ramamurthy
Lyricist Mayavanathan
Singers P.Suseela
Year 1962
Song Lyrics தண்ணிலவு தேனிறைக்க
தாழை மரம் நீர் தெளிக்க
கன்னி மகள் நடை பயின்று சென்றாள்
இளம் காதலனை கண்டு நாணி நின்றாள் (தண்ணிலவு)

நெஞ்சமதில் அலை எழும்ப தஞ்சமலர் அடி கலங்க
அஞ்சி அஞ்சி இடை துவள வந்தாள் அங்கு

அன்பருள்ளம் தனை நினைந்து நின்றாள்
நினைந்து நின்றாள் (தண்ணிலவு)

விண்ணளந்த மனம் இருக்க மண்ணளந்து அடி எடுக்க
பொன்னளந்த உடல் நடுங்க வந்தாள் ஒரு
பூவளந்த முகத்தை கண்டு நின்றாள்
கண்டு நின்றாள் (தண்ணிலவு)

பொட்டிருக்க பூவிருக்க பூத்த மலர் மணமிருக்க
கட்டிலுக்கு மிக நெருங்கி வந்தாள் இரு
கண் விழியில் கவிதை கண்டு நின்றாள்
கண்டு நின்றாள் (தண்ணிலவு)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY