Ethanai Malargal Ethanai Nirangal
Oru Nadigai Nadagam Parkiral
Hero Srikanth
Music Director M.S.Viswanathan
Lyricist Jayakanthan
Singers T.M.Soundarajan,Vani Jayaram
Year 1978
Song Lyrics

எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள்
எத்தனை மணங்கள் திருமணங்கள்
அத்தனை மலரும் உதிர்வதில்லை அந்த
அன்பெனும் ஈரம் உலர்வதில்லை
நித்தமும் புது மணங்கள் இங்கு
நேர்ந்திடும் திருமணங்கள்......(எத்தனை)

முத்தினை போல் பனித்துளி இருக்கும்
முத்திருக்கும் தொட்டால் முள்ளிருக்கும்
புத்தனை போலொரு புத்தியிலே சிலர்
பூக்களை மறந்தார் பூமியிலே இந்த
பூக்களை மறந்தார் பூமியிலே...(எத்தனை)

நீயும் நானும் யாரோ எவரோ
நிழலாய் உருவாய் துணையானோம்
தாயும் தந்தையும் இல்லாத ஒரு
தனிமையில் கலந்து உறவானோம்..(எத்தனை)

மலரினும் மெல்லிது மெல்லிது சில மனங்கள்
மயங்கியும் குழம்பியும் தெளியும்
சில குணங்கள் நல்ல குணங்கள்
உறவினில் எழும் இன்ப நாதம் காதல் கீதம்
ஒலிக்கும் மணியெல்லாம் உயர்ந்த வேதம்
உதிரும் மலர்கள் நல்லாசிகள் ஓதும்...(எத்தனை)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY