Un Perai Ketten
Song Lyrics

உன் பேரைக் கேட்டேன் தென்றல்தனில் நான்
கண்டாலே ஆடும் நெஞ்சம் தை தை தை (உன்)

பின்னே மறைந்து கண்ணில் கலப்போம்
நீயாகும் என்றே சொல்லும் நெஞ்சே
என்னாசை தனக்கே கண்ணால் நிறம் தந்தாய்
மேலாடும் எந்தன் நெஞ்சம் தை தை தை (உன்)

முந்நாளில் வெறுத்த எந்தனின் கண்கள்
ஏனோ இன்றே மதி மாறிப் போச்சே
விழிப்பான காதலே விளையாடும் காதலில்
மேலாடும் எந்தன் நெஞ்சம் தை தை தை (உன்)

என்னைப் பிரிந்தே நெஞ்சம் தள்ளாதே
ஏனின்று இவ்விதம் நேர்ந்ததுவோ
ஏகாதி நீயே என்னைப் பிரிந்தால்
கண்ணீரில் ஆடும் நெஞ்சம் தை தை தை (உன்_)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY