Santhana Poikaiyil Thendral
Thanga Rathinam
Hero S.S.Rajendran
Music Director K.V.Mahadevan
Lyricist K.S.Krishnamoorthy
Singers C.S.jayaraman
Year 1960
Song Lyrics

சந்தனப் பொய்கையில்
தென்றலெனும் பெண்ணாள்
வந்து வந்து மயக்கி
விந்தைகள் செய்கிறாள் (சந்தனப்)

சொந்தமுடனே என்னை
தொட்டுத் தொட்டு பேசுகிறாள் - தமிழ்
தூய மணம் சுமந்து
தொடர்ச்சியாக வீசுகிறாள்.......(சந்தனப் )

அல்லிக் கொடியாளுடன் அழகு நடம் ஆடுறாள்
அருவி அணங்குடனே ஆலோலம் பாடுறாள்
முல்லைக் கொடியால் முகத்தை
முத்தமிட்டு ஓடுறாள்

மூவேந்தர்க்கும் செல்வி என்ற
முறையைக் கொண்டு நாடுறாள்
சேர சோழ பாண்டியராம் மூவேந்தர்க்கும்
செல்வி என்ற முறையைக் கொண்டு நாடுறாள் (சந்தனப்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY