Pokiren Puthiya Ulagam
Manam Oru Kurangu
Hero R.Muthuraman & A.V.M.Rajan
Music Director D.B.Ramachandran
Lyricist V.Seetharaman
Singers T.M.Soundarajan,P.Suseela
Year 1967
Song Lyrics

போகிறேன் புதிய உலகம் போகிறேன்
பார்க்கிறேன் புதுமை இன்பம் பார்க்கிறேன்
கேட்கிறேன் மதுர கீதம் கேட்கிறேன்
சேர்க்கிறேன் அன்பில் உன்னை சேர்க்கிறேன் (போகிறேன்)

இந்த உலகம் எந்தன் கையிலே
இன்ப சொர்க்கம் எந்தன் விழியிலே
உந்தன் உருவம் ஆசை மனதிலே
உள்ளம் துள்ளும் அந்த நினைவிலே (கேட்கிறேன்)

அன்ன நடை நடந்து காட்டுவேன்
அழகு மயிலைப் போல ஆடுவேன்
சின்ன இடைப் பிடித்து தேடுவேன்
மின்னும் கனிச் சுவையை நாடுவேன் (கேட்கிறேன்)

வண்ணக் கிளியின் மொழி பேசுவேன்
வாரி எடுத்து உன்னை பாடுவேன்
என்றும் இந்த சுகம் காணுவேன்
என்னை உனக்கு தந்து வாழுவேன் (கேட்கிறேன்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY