Umaiyavale Mariyamma
Aanantha Bairavi
Hero Ravichandran
Music Director R.Ramanujam
Lyricist Thavaseelan
Singers S.Varalakshmi
Year 1978
Song Lyrics

உமையவளே மாரியம்மா
வரம் தருவாய் மாரியம்மா
விழிமலர் தன்னை உந்தன்
பதங்களில் வைத்தே இன்று
சன்னதி சரண் அடைந்தேன்.....(உமையவளே)

ஆனந்த ராகங்கள் அவள் பாடவே –அந்த
காலத்தில் வேதங்கள் எதற்காகவோ
மணக்கோலம் மகள் காண விதித்தாயம்மா இந்த
திருக்கோலம் எதற்காக கொடுத்தாயம்மா (உமை)

பொன்னோடு பொருள் கேட்டு வரவில்லையே
எந்தன் பெண் வாழ உனையன்றி துணையில்லையே
ஒரு போது சிவனோடு உமையாகினாய்
எந்தன் மகள் வாழ்வில் மட்டும் கதை மாற்றினாய் (உமை)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY