Ninaithathai Nadathiye
Namnadu
Hero MGR
Music Director M.S.Viswanathan
Lyricist Vali
Singers T.M.Soundarajan,L.R.Eswari
Year 1969
Song Lyrics

நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான் நான்
துணிச்சலை மனத்திலே வளர்த்தவன் நான் நான்
என்னிடம் மயக்கம் கொண்டவர் பழக்கம்
இன்றும் என்றும் தேவை என்று சொல்லடி தங்கம்

தங்கம் தங்கும் எந்தன் அங்கம் எங்கெங்கும்

பொன்னும் பெண்ணும் வந்து மின்னும் கண் எங்கும்
விளையாட்டுப் பிள்ளைகள் தலையாட்டும் பொம்மைகள்
வர வேண்டும் எல்லோரும் உறவாட இந்நேரம்
பட்டாடை தொட்டாடக் கட்டாயம் வா (நினைத்ததை(

பன்னீரில் குளிப்பது மாளிகை நெஞ்சம்
கண்ணீரில் மிதப்பது ஏழைகள் உள்ளம்
படைத்தான் ஒரு உலகம் பணம் தான் அதன் உருவம்
எதுவும் இதில் அடக்கம் இது ஏனென்று

எதிர்காலம் விடை கூறட்டும் (நினைத்ததை)

செந்தேனை வடிப்பது தாமரை கன்னம் -
அதை சிந்தாமல் கொடுப்பது பூவிழிக் கிண்ணம்

முதல் நாள் மெல்ல தொடலாம்

மறுநாள் மிச்சம் பெறலாம் அவன்தான் நல்ல ரசிகன்
இதை அறியாத நீ யாரோ புதுப் பாடகன் (நினைத்ததை)

சொல்லாமல் நடப்பது நாடகமொன்று
அது இன்றோடு நில்லாமல் நாளையும் உண்டு

இதழ் மேல் ஒரு பாடல் மடிமேல் விளையாடல்
இடையில் சிறு ஊடல்
இதை நான் சொல்லத் தானிந்த விழி ஜாடைகள் (நினைத்ததை

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY