Thanneer Vittom Valarthom
Kappalotiya Tamizhan
Hero Sivaji Ganesan
Music Director G.Ramanathan
Lyricist Mahakavi Bharathiyar
Singers Trichy Loganathan
Year 1961
Song Lyrics

தண்ணீர் விட்டோம் வளர்த்தோம் சர்வேசா
இப்பயிரை கண்ணீரால் காத்தோம் கருக திருவுளமோ
கண்ணீரால் காத்தோம் கருக திருவுளமோ

எண்ணமெல்லாம் மெய்யாக எம்முயிரினுள் வளர்ந்த
வண்ண விளக்கிது மடிய திருவுளமோ
தண்ணீர் விட்டோம் வளர்த்தோம்

ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போல வந்த மாமணியை தோற்போமோ
மாதரையும் மக்களையும் வஞ்சமையால் பிரிந்து
காதல் இளைஞர் கருத்தழிதல் காணாயோ

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ
எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கி இரு

கண்ணற்ற சேய்போல் கலங்குவதும் காண்கிலையோ

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY