Anbulla Appa Appa
Sigaram Thodu
Hero Vikram Prabu
Music Director D.imman
Lyricist Yugabharathy
Singers K.J.Jesudass
Year 2014
Song Lyrics

அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன் போல் இல்லை மண் மேலே
அன்புள்ள அப்பா அப்பா…
அன்புள்ள அப்பா அப்பா

தாயையும் உன்னில் கண்டேன் அன்பிலே
எனக்கெது தேவை உலகிலே
கொடுத்திடுவாய் நீ முதலிலே
வேண்டாமலும் தரும் தெய்வம்
நீ தானே உண்மையிலேயே...(அன்புள்ள)

மாதக் கணக்கில் தாயும் சுமந்து
வந்ததுதான் இவனது உயிரே
காலம் முழுக்க என்னை சுமந்து
காத்திருக்கும் உனக்கு இல்லை நிகரே

தூசி என்னை தொடவும் விட மாட்டாய்
தோளில் என்னை சுமந்தே நடைப் போட்டாய்
வந்தாயே நீ என் வரமாய்
அன்புள்ள அப்பா அப்பா

தோழனென நீ தோளும் கொடுத்து
தோல்விகளை ஜெயித்திட வருவாய்
சோகமெதையும் உன்னுள் மறைத்து
புன்னகையை எனக்கென தருவாய்

கண்ணிமையில் என்னை நீ அடைக்காத்து
தூங்கிடவும் மறப்பாய் என்னை பார்த்து
வாழ்வாயே நீ என் நிழலாய்
அன்புள்ள அப்பா அப்பா….......

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY