Jalamellam Theriyuthu Aaha
Thanga Rathinam
Hero S.S.Rajendran
Music Director K.V.Mahadevan
Lyricist A.Maruthakasi
Singers T.M.Soundarajan,K.Jamunarani
Year 1960
Song Lyrics

ஜாலமெல்லாம் தெரியுது ஆஹா
ஜாடையாலே புரியுது ஓஹோ
என்னையே எளிதினில் ஏய்க்கவும் முடியாது
ஜாலமெல்லாம் தெரியுது ஆஹா

பொய்க்கோபம் கொள்ளுவதும்
போவென்று தள்ளுவதும்
கைக்கார ஆண்கள் செய்யும்
மெய்க்காதல் சாகசமே.....

தேடும்போது ஓடுவதும்
ஓடும்போது தேடுவதும்
வாடிக்கையாய் பெண்களின் நெஞ்சில்
வளர்ந்திருக்கும் சாகசமே.....(ஜாலமெல்லாம்)

கன்னத்தைக் கிள்ளுவதும்
கண்ணாலே கொல்லுவதும்
கன்னியரை மயக்க ஆண்கள்
கைக்கொள்ளும் சாகசமே

கரும்பாக பேசுவதும்
காதல் வலை வீசுவதும்
எறும்பாக ஆணைப் பெண்கள்
இழுக்கச் செய்யும் சாகசமே....(ஜாலமெல்லாம்)

குறும்பான பார்வையிலே
கொஞ்சி வரும் கார்வையிலே
அரும்பான காதல் மலர்ந்து
அன்பு மனம் வீசிடுமே.......(ஜாலமெல்லாம்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY