Enakku Nee Unakku Naan
Thanga Rathinam
Hero S.S.Rajendran
Music Director K.V.Mahadevan
Lyricist A.Maruthakasi
Singers P.Suseela
Year 1960
Song Lyrics

எனக்கு நீ உனக்கு நான் பொருத்தமான ஜோடி
இனிக்கும் இன்ப உலகினிலே
இருவரும் வாழ்ந்திடலாம்
ஒன்றாகக் கூடி புது உல்லாசந் தேடி (எனக்கு)

சிங்கார நினைவு அலைகள் ஆடும் –தினமும்
தேனூறும் காதல் கீதம் பாடும்
அன்புக் கடல் நீ அதன் கரை நான் என மகிழலாம்
ஒன்றாகக் கூடி புது உல்லாசந் தேடி (எனக்கு)

சூடாத முல்லை இன்று நானே –உந்தன்
தோள்மீது நாளை தவழுவேனே
சொந்தமாவேன் மணம் புரிவேன் சுகம் காணுவேன்
ஒன்றாகக் கூடி புது உல்லாசந் தேடி (எனக்கு)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY