Innoruvar Thayavetharkku
Thanga Rathinam
Hero S.S.Rajendran
Music Director K.V.Mahadevan
Lyricist A.Maruthakasi
Singers P.Suseela
Year 1960
Song Lyrics

இன்னொருவர் தயவெதற்கு
இந்நாட்டில் வாழ்வதற்கு
இல்லையென்ற குறையும் இங்கே
இனிமேலும் ஏன் நமக்கு.....(இன்னொருவர்)

கன்னித்தாய் காவேரி எந்நாளும் துணையிருக்க
கைகளிலே உழைப்பதற்கு பலமிருக்கத் திறமிருக்க
பொன் விளையும் வளமுடைய கண்ணான நிலமிருக்க
புகழுடனே உலகையாண்ட
இனம் என்ற பெயரிருக்க..........(இன்னொருவர்)

எண்ணத்தால் இமயம்போல் உயர்ந்துவிட்ட மனமிருக்க
லட்சியமே உயிராகக் கொண்டாடும் குணமிருக்க
முன்னேற்றப் பாதையிலே அறிவோடு நாம் நடக்க
கண்ணோட்டம் கொண்டவர்கள்
வழிகாட்டிக் காத்திருக்க........... (இன்னொருவர்)

வந்தாரை வரவேற்று வாழவைத்த தென்னாடு
வள்ளுவனார் பொதுமறையை வழங்கிய நம்நாடு
இந்நாளில் பிறர் கையை எதிர்பார்த்து வாழுவதா
எந்நாளும் துயர்மேகம் நம்மீது சூழுவதா (இன்னொருவர்)


COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY