Kanda Kanavum Indru
Song Lyrics

கண்ட கனவும் இன்று பலித்ததே –என்

காதல் செல்வம் கையில் கிடைத்ததே

கண்ட கனவும் இன்று பலித்ததே


கொண்ட கொள்கைதான் பரணி பாடுதே –நான்

கொண்ட கொள்கைதான் பரணி பாடுதே

கொள்ளா ஆனந்த கூத்தாடுதே –உள்ளம்

கொள்ளா ஆனந்த கூத்தாடுதே (கண்ட கனவும்)


ஆடாதே மயிலே அன்பனை மயக்க வழி தேடாதே –நீ

ஆடாதே மயிலே.........

ஆடுவதை எந்தன் காதலன் கண்டால் –என்

ஆடலை வெறுக்கவும் கூடுமன்றோ - நீ

ஆடாதே மயிலே........

பாடும் குயிலே பாடாதே.......என் பாட்டோடு நீ

போட்டிப் போடாதே

பாடும் குயிலே பாடாதே.......என் பாட்டோடு நீ

போட்டிப் போடாதே

நாடிய கண்ணாளன் உன் பாடலைக் கேட்டால்

நங்கை என் பாடலை வெறுக்கவும் கூடுமன்றோ

இந்தாடி நானொரு புஷ்பம் தந்தேனே

இங்கே இருக்க வேண்டாம் புள்ளி மானே (2)

சிந்தும் அழகோடும் மருளும் விழிக் கண்டால்

வேல்விழியின் அழகைப் போற்றுவதுண்டோ - என்

வேல்விழியின் அழகைப் போற்றுவதுண்டோ (கண்ட கனவும்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY