Mappillai Vanthan Mappillai
Kaveriyin Kanavan
Hero Muthukrishnan
Music Director K.V.Mahadevan
Lyricist Thanjai Ramaiya Dass
Singers L.R.Eswari,M.S.Rajeswari
Year 1959
Song Lyrics மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான்
மாட்டு வண்டியிலே
பொண்ணு வந்தா பொண்ணு வந்தா
பொட்டி வண்டியிலே

புள்ளைய பெத்த அப்பா வந்தான்
மொட்ட வண்டியிலே
பொண்ண பெத்த அப்பா வந்தான்
ஓட்ட வண்டியிலே........(மாப்பிள்ளை)

காக்கா கடி கடிச்சு கொடுத்த
கம்மர்க்கட்டு முட்டாயி
சோக்கா வாங்கி தின்னுபுட்டு,
விட்டானய்யா கொட்டாவி

ஓட்டாஞ் சல்லிய எடுத்துகிட்டு,
ஓடுனாங்க மாருக்கட்டு
ஒராழாக்கு அரிசி வாங்கி
ஒலையிலத்தான் போட்டுக்கிட்டு

கூட்டஞ்சோறு ஆக்கிகிட்டு
கும்மாளம்தான் போட்டுக்கிட்டு
குழவிக் கல்லு புள்ளைய ஒண்ண
குஷியாக பெத்து கிட்டு,
ஆராரோ......... நீ யாரோ..........,
அருமையான கொழந்தை யாரோ......

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY