Avanavan Thalaiyezhuthu
Darisanam
Hero A.V.M.Rajan & Srikanth
Music Director Soolamangalam Rajalakshmi
Lyricist Kannadasan
Singers T.M.Soundarajan
Year 1970
Song Lyrics

அவனவன் தலையெழுத்து
அண்ணன் தம்பி தங்கை என்று
ஆட்டு மந்தை போல் கூடி வாழ்வது
அவனவன் தலையெழுத்து.......(அவனவன்)

சலவை செய்யும் தோழனை –அந்தக்
கழுதை காப்பாத்தும் – சிகை
அழகு செய்யும் தோழனை – ஒரு
கத்தியும் காப்பாத்தும்

உறவு பாசம் ஆயிரம் பிள்ளைகள்
ஒன்றாய்ப் பிறந்தாலும் –அது
உன்னிடம் இருந்தால் வாங்கிக் கொள்ளும்
உன்னையா காப்பாத்தும்......(அவனவன்)

வதவதவென்று பெற்று விட்டாண்டா
வருஷத்துக்கொரு பிள்ளை –இவன்
வருகிற தேர்தலில் போட்டியிட்டாலே
ஒட்டுக்குக் குறைவில்லை

இப்படித்தாண்டா எல்லோரும் பெற்றார்
எத்தனயோ பிள்ளை
இருக்கிற நிலையில் பிறக்கிற பிள்ளைக்கு
நிற்கவும் இடமில்லை.........(அவனவன்)

மாட்டிகிட்டான் மாட்டிகிட்டான்
மாட்டிகிட்டான் டோய்.........
ரோஜாப்பூ மாலை போட்டு ராஜாத்தி பக்கம் வச்சு
ஜோராகப் போறியேடா மாப்பிள்ளை

கல்யாணம் என்ற பேரில் கைகளில் கட்டுப்போட்டு
கைதியாக மாட்டிகிட்டே மாப்பிள்ளே
பொண்ணுக்கிட்ட மாட்டிகிட்டா
போதை வரும் ஆசை வரும்
போகப் போக புத்தி வரும் மாப்பிள்ளே பின்னே

கண்ணு கெட்டு பல் விழுந்து
கருத்த தலை நரைக்கும்போது
கடவுளைத்தான் நினைக்க வரும் மாப்பிள்ளே

ஆசையை ஏன் காட்டிக்கிட்டே மாப்பிள்ளே
சேலையிலே மாட்டிக்கிட்டே மாப்பிள்ளே –உன்னை
சிறையில் வச்சு பூட்டிகிட்டே மாப்பிள்ளே
மாப்பிள்ளே மாப்பிள்ளே மாப்பிள்ளே.......

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY