Kaana Kan Kodi Vendum
KONJUMSALANGAI
Hero GEMINI
Music Director S.M.Subbaih Naidu
Lyricist V.Seetharaman
Singers Soolamangalam Rajalakshmi
Year 1962
Song Lyrics

காண கண் கோடி வேண்டும் – ஐயன்
கால் தூக்கி நின்றாடும் காட்சி பொன்னம்பலத்தில்
காண கண் கோடி வேண்டும் ஐயன்
கால் தூக்கி நின்றாடும் காட்சி பொன்னம்பலத்தில்(காண)

மானாட மழுவாட மதியாட புனலாட
வானாட அயனாட மங்கை சிவகாமியாட
காண கண் கோடி வேண்டும் – ஐயன்
கால் தூக்கி நின்றாடும் காட்சி பொன்னம்பலத்தில் (காண)

நீர்ப்பூத்த மேக நிறம் கொண்ட வண்ணா
கார்ப் பூத்த உந்தி பரந்தாமனே கண்ணா
பார் மேவும் ஸ்ரீரங்கம் காவிரி கரைமேலே
வண்ணத்துயில் கொண்டுலகை காக்கும் பெருமாளே

ஏன் பள்ளிக் கொண்டீர் ஐயா ஸ்ரீரங்கநாதா......
ஏன் பள்ளிக் கொண்டீர் ஐயா ஸ்ரீரங்கநாதா.......

மணமிகும் கதம்பவன வாசினி ஆ,,,,ஆ,,,,,
மாமதுரா புரியாளும் தேவி மகராணி
திக்விஜயம் செய்ய சேனையுடனே சென்று
சொக்கனுக்கு மாலையிட்ட மீனாட்சி (மணமிகு)

குறவள்ளி குஞ்சரி மருவிடும் குகனே ஆ....ஆ...
திருச்செந்தூர் வளர் ஆறுமுகனே –ஒரு
மாங்கனி வேண்டி சிறுப்பிள்ளைத்தனமாக
உலகை வலம் வந்த சிவபாலா.......
உன் திருக்கோயில் வலம் வர நானென்ன
புண்ணியம் செய்தேன் வடிவேலா.........

பச்சை மாமலை போல் மேனி
பவளவாய் கமலச்செங்கண் அச்சுதா அமரரே
ஆயர் தம் கொழுந்தே....

அடியோடும் விண்ணோடும் பிரிவின்றி
ஆயிரம் பல்லாண்டு
பணிவாய் நின் மலர் மார்பில் வாழ்கின்ற
மங்கையும் பல்லாண்டு

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்........




COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY