Kathal karumbu Kanden
Petra Manam
Hero Sivajiganesan
Music Director S. Rajeswararao
Lyricist Jayakanthan
Singers Jikki,C.S.jayaraman
Year 1960
Song Lyrics

காதல் கரும்புக் கண்டேன் அரும்புக் கண்டேன்
கன்னியைக் காணேனே

மாங்கனியைக் கண்டேன் கிளியைக் கண்டேன்
மங்கையைக் காணேனே (காதல்)

கண்கள் மலர்ந்து நின்றேன் குறும்பு பேசும்
வார்த்தைக் கேட்டேனே என்
தலைத் திரும்பும் முன்னே உள்ளம் மட்டும்
திரும்பிடக் கண்டேனே

சித்திர தேரின் ஊர்வலம் கண்டேன்
சிலையை மட்டும் காணேனே
செந்தமிழ் வடிவ பைங்கொடிக் கண்டேன்
சேழிழையாளைக் காணேன் (காதல்)

கண்கள் திறந்தேன் என்னை மறந்தேன்
காதல் நதியில் வெள்ளம்
உண்மை அறிந்தேன் பெண்மை இழந்தேன்
ஓடி விழுந்தது உள்ளம் (காதல்)

தந்தையும் இல்லை அன்னையும் இல்லை
தலைமுறை சொந்தம் இல்லை
வஞ்சி மலர்க்கொடி வந்து விழுந்தது
மார்பினில் பூத்தது முல்லை (காதல்)

காதல் கரும்பு கண்டோம் கலந்துக் கொண்டோம்
கண்ணின் மணிப்போலே வரும்
இன்பக் கிளையில் கனிகள் எடுப்போம்
வண்ணக்கிளிப் போலே

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY