Puthu Pennin Manathai
Parasakthi
Hero Sivajiganesan
Music Director R.Sudharsanam
Lyricist K.P.Kamatchi Sundaram
Singers M.S.Rajeswari
Year 1952
Song Lyrics

புது பெண்ணின் மனதைத் தொட்டு போறவரே
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க - இள
மனசை தூண்டி விட்டு போறவரே – அந்த
மர்மத்தை சொல்லி விட்டு போங்க – அந்த
மர்மத்தை சொல்லி விட்டு போங்க (புது பெண்ணின்)

உம்மை எண்ணி எங்கும் என்னிடத்தில் சொல்லாமல்
இருட்டு வேளையிலே யாரும் காணாமலே
திருட்டுத்தனமாய் சத்தம் செய்யாமலே
திருட்டுத்தனமாய் சத்தம் செய்யாமலே
சந்தித்திருந்ததெல்லாம் சிந்தித்துப் பாராமலே (புது பெண்ணின்)

என்னை சுற்றி பறந்த வண்டே சும்மா நீ போகாதே
புத்தம் புது மலரின் தேனை சுவைத்து போவாயே
இன்ப கனவை ஏனோ கலைக்கிறாய்
இன்ப கனவை ஏனோ கலைக்கிறாய்
அன்பு கயறிதுதான் அறுக்க யாராலும் ஆகாதய்யா (புது பெண்ணின்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY