Ohoho Machan Neengala
Sowbakiavathy
Hero Geminiganesan
Music Director M.S.Gnanamani
Lyricist Pattukottai Kalyanasundaram
Singers P.Suseela,P.Leela,Jikki
Year 1957
Song Lyrics ஓகோகோ மச்சான் நீங்களா-இங்கே
உள்ளே நுழைய வந்தீங்களா
கேக்காத கதையைக் கேட்டிங்களா -அதை
கேட்டிருந்தும் கேள்விகளைப் போட்டீங்களா!

வண்ணமுக வெட்டழகி வட்டவிழிக் கட்டழகி
சின்னஞ்சிறு பொட்டழகி தெரியுமா-அவ
அன்ன நடை மின்னலிடை அத்தனையும் சேர்ந்து
ஒரு பொண்ணா வந்து பொறந்திருக்கா புரியுமா?

முத்தத்திலே மோடிகளிருக்கு கட்டிப்போடும்
கையை கட்டிப்போடும்-நித்தம்
ரத்தத்திலே நீஞ்சிற சாத்தான்
சத்தம் போடும் மச்சான் சத்தம் போடும்

சக்திக்கு மேல் ஆசையிருக்கு
தடவிப் பார்க்க மீசையிருக்கு
முத்திப் போன காதல் கிறுக்கு
முளிச்சுக்கிட்டே குருடாயிருக்கு

அவலை நினைச்சு உரலை உருட்டும்
அயித்தை மவனைப் பாருங்கடி
கவலை புடிச்சிக் கலங்குறாரு
காலைப் புடிச்சி வாருங்கடி

தவளை தத்துற நடை நடக்குற
சங்கதி என்ன கூறுங்கடி
கொவளை நிறைய தண்ணி வச்சு அதில்
இவரைப் புடிச்சி போடுங்கடி

குதிச்சு ஆடுங்கடி வந்து கூட்டமாப் பாடுங்கடி
மதிச்சு நடங்கடி வடை மாலையப் போடுங்கடி
போட்டிக்கு வந்தவரு மாட்டிக் கிட்டாராம்
பொண்ணுக்குக் கண்ணி வச்சு கோட்டை விட்டாராம்

பூட்டிய வீட்டில் புகுந்து கிட்டாராம்
பொட்டியைத் தேடி ஆளை மிதிச்சாராம்
கத்தியைக் கண்டொருத்தர் காதல் கொண்டாராம்
கையில் கொடுத்தவுடன் கண்ணீர் விட்டாராம்

எத்தனை பேரோ ஏமாந்துட்டாராம்
சத்திரவீரர் வித்தை காட்டுராறாம்
சந்தர்ப்பம் பாத்து ஒரு சாமி வந்தாராம்
சக்தி நிறைஞ்சுதுண்ணு சாம்பல் தந்தாராம்
மந்திரம் பண்ணி மயக்கப் பார்த்தாராம்
மயங்காத கன்னி விலங்கைப் பூட்டினாளாம் (போட்டிக்கு)

வாடி வாடி கட்டப் பொண்ணே வாடி
வந்திருச்சு ஜோடி மந்திரத்தை மீறி
வாசலுக்கு முன்னாடி-ஹேய்

கருப்போ சிவப்போ மச்சான்
விரும்புறது பெண்தானடி
கசப்போ இனிப்போ மச்சான்
ஒம்மேலே ஒரு கண்தானடி

பாரு பாரு பக்கம் வந்து பாரு
ஊரு பேரு ஒனக்குச் சொல்லுவாரு
ஒண்ணுமில்லே தகராறு-ஹேய் (கருப்போ)

ஏது ஏது இது தெரியாது
இருக்குது காது எதுவும் கேட்காது
எடத்தை விட்டு நகராது - ஹேய் (கருப்போ)

வீராவீராதி வீரரான சூரா
மாறாத மோகங் கொண்டீரா
மானோடு உறவாட வந்தீரா

ஏறாத மாமலையில் ஏறி வேங்கையோடு
போர் புரிந்து பெரும் பேரடைந்தோமென
ஊர் திரும்பி விடுவீரா......
பாரினில் அதிகாரமுடைய நாரியரிடம்
உமது சக்தி நீரினில் விழும் தீ!

வேருடன் எல்லா விதிகளும்
மாறிடும் ஒரு மங்கை சொல்லில்
அதை மறந்தீரோ
இத்தனை கேட்டும் அறிவிழந்தீரோ?

ஓரக் கடலில் ஈரமிருந்தும்
ஊன்றும் விதையதில் உயிர் பெறாது
உணர்ந்து திரிந்து ஓடினாலே
உங்கள் உயிர் இனி உடலில் வாழும்
அதை மறந்தீரோ
இத்தனை கேட்டும் அறிவிழந்தீரோ.......

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY