Un Thalaimudi Uthirvathai
Kadhalil Vizhunthen
Hero Nakul
Music Director Vijay antony
Lyricist Thamarai
Singers Karthik,Maya,Nithish Gopalan
Year 2008
Song Lyrics

உன் தலைமுடி உதிர்வதைக் கூட
தாங்க முடியாது அன்பே
கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்
உன் ஒரு நொடி பிரிவினைக் கூட
ஏற்க முடியாது கண்ணே

என் கனவிலும் உன் முகம் தேடுவேன்
உன்னை வானத்தில் தேடியே
மேகம் கண்ணீரை சிந்துதோ
உன்னை நான் கண்டு சேரவே
பூமி என்னோடு சுற்றுதோ.......(உன் தலைமுடி)

உச்சந்தலை மீது நீ கொடுக்கும் முத்தம்
உயிரின் மீது பட்டுத் தெறிக்கும்
கைகள் பற்றிக் கொண்டே
பேசிக் கொள்ளும் நேரம் இனிக்கும்

எதிர்வரும் காற்று உன் பெயரை
என் மேல் தினமும் கிறுக்கி விட்டுப் போகும்
நெற்றிப் பொட்டுக்குள்ளே
கொட்டி விட்டேன் என்னை முழுதும்

உன் கண்ணில் பட்ட பூவைக் கூந்தலுக்குள் வைப்பேன்
காலில் பட்டக் கல்லை மூக்குத்தியில் வைப்பேன்
கையில் பட்ட என்னை உன் இதயப் பையில் வைப்பேன்
என்னைக் கொடுப்பேன்........(உன் தலைமுடி)

நீயும் என்னை தினம் தேட வேண்டுமென்று
தொலைந்துப் போக கொஞ்சம் ஆசை
நான் அணைத்து தூங்கும்
மீசை வைத்த பொம்மை நீயே

மேய்ச்சல் நிலமாக வீழ்ந்துக் கிடக்கின்றேன்
மேய்ந்துக் கொள் என்னை முழுதும்
தொட்டிலின்றித் தூங்கும் என் மார்பில்
உந்தன் முத்தம் தினமும்

உன்னைப் பற்றியெழும் காதல் கொடி நானே
உன் கையெழுத்தைத் தாங்கும் காகிதமும் நானே
உன் உள்ளங்கையில் சுற்றும் பம்பரமும் நானே
எந்தன் உயிரே................(உன் தலைமுடி)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY