May Madha Megam
Shajakan
Hero Vijay
Music Director Manisharma
Lyricist Vairamuthu
Singers Sujatha,Devan E.Ekambaram
Year 2001
Song Lyrics

மே மாத மேகம் என்னை
நில் என்று சொல்ல பட பட
பேசாத பெண்மை என்னை
பேர் சொல்லும்போது கால்கள் தட தட

ஆண் வாடை காற்று என்
ஆடைக்குள் மோத பட பட
போர் செய்யும் பார்வை என்
நெஞ்சோடு மோத கால்கள் தட தட

புன்னகை சொட்டு புன்னகை
என்னை புலவனாய் மாற்றுதே
பூமியும் அந்த வானமும்
சின்ன புள்ளியாய் போனதே

கண்களே அந்த கண்களே
எந்தன் கற்பினை தீண்டுதே
பூவுக்கும் ஈட்டி வேலுக்கும்
இன்று போர்க்களம் மூண்டதே

சில நேரம் வேலும் வெல்லலாம்
பல நேரம் பூவும் வெல்லலாம்
அதுதானே காதல் யுத்தம் அன்பே

வென்றாலும் இனிமை காண்பதும்
தோற்றாலும் பெருமை காண்பதும்
இங்கேதான் காணக்கூடும் அன்பே (ஓ மேமாத)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY