Manasu Rendum Parkka
Kadhal Konden
Hero Dhanush
Music Director Yuvan shankar raja
Lyricist Palani Bharathi
Singers Sankar Mahadevan
Year 2003
Song Lyrics

மனசு ரெண்டும் பார்க்க
கண்கள் ரெண்டும் தீண்ட
உதடு ரெண்டும் உரச
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே

நரம்பில் ஒரு நதி பாயுதே
இது என்ன வேட்கை
காதல் வலி உடல் காயுதே
இது என்ன வாழ்க்கை
ஒரு பார்வையில் ஒரு வார்த்தையில்
ஒரு தீண்டலில் நான் மீண்டும் பிறப்பேனே (மனசு)

காதல் சருகான பின்பு
மோகம் வந்தாலே சாபம்
கண்ணில் முள் வைத்து மூடி
தூங்க சொன்னாலே பாவம்

உன் மார்பில் வழிகின்ற நீர் அள்ளி
மருந்து போல குடிப்பேன்
என் பித்தம் கொஞ்சம் தணிப்பேன்
உன் பாத சுவடுக்குள்
சுருண்டு விழுந்து மரிப்பேன்
உடல் சீறுதே நிறம் மாறுதே
வலி ஏறுதே இது என்ன கலவரமோ (மனசு)

நிலவின் ஒளியில் அலைகள் எரியுமா
அலையின் வேதனை நிலவு அறியுமா
வேதனைகள் நெஞ்சில் சுகமா எங்கும் பரவுதடி
உடலே உடலே உறைந்து போய்விடு
மனமே மனமே இறந்து போய்விடு

பாதையிலே சிறு கல்லாய் என்னை கிடக்க விடு
உன் பார்வையில் என்னை கொன்றுவிடு பெண்ணே
உன் கூந்தலில் என்னை புதைத்து விடு பெண்ணே

கொல்வதற்கு முன்னே ஒரு
முத்தமிடு பெண்ணே அதை மறைக்காதே…
ஒரு பார்வையில் ஒரு வார்த்தையில்
ஒரு தீண்டலில் நான் மீண்டும் பிறப்பேனே (மனசு)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY