Enna Solli Ennai Solla
Thenali
Hero Kamalahasan
Music Director A.R.Rahman
Lyricist Pa vijay
Singers SP. Balasubramaniam,Sadana Sargam
Year 2000
Song Lyrics

என்ன சொல்லி என்னை சொல்ல
காதல் என்னை கையால் தள்ள
இதயம் தான் சரிந்ததே, உன்னிடம் மெல்ல
சுவாசமே..சுவாசமே..

ஜன்னல் காற்றாகி வா ஜரிகை பூவாகி வா
மின்னல் மழையாகி வா உயிரின் மூச்சாகி வா
சுவாசமே..சுவாசமே..சுவாசமே..சுவாசமே..
என்ன சொல்லி என்னை சொல்ல........
வாசமே..வாசமே..வாசமே..வாசமே..

என்ன சொல்லி என்ன சொல்ல
கண்கள் ரெண்டில் கண்கள் செல்ல
சிறகுகள் முளைக்குதே மனசுக்குள் மெல்ல

ஜன்னல் காற்றாகி வா ஜரிகை பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா.......

இடது கண்ணாலே அகிம்சைகள் செய்தாய்
வலது கண்ணாலே வன்முறை செய்தாய்
ஆறறிவோடு உயிரது கொண்டேன்
ஏழாம் அறிவாக காதல் வர கண்டேன்

இயற்கை கோளாரில் இயங்கிய என்னை
செயற்கை கோளாக உன்னை சுற்ற வைத்தாய்

அணு சக்தி பார்வையில் உயிர் சக்தி தந்தாய்
அனு சக்தி பார்வையில் உயிர் சக்தி தந்தாய்
சுவாசமே சுவாசமே.........

இசை தட்டு போல இருந்த என் நெஞ்சை
பறக்கும் தட்டாக பறந்திட செய்தாய்
நதிகள் இல்லாத அரபு தேசம் நான்
நைல் நதியாக எனக்குள்ளே வந்தாய்

நிலவு இல்லாத புதன் கிரகம் நானே
முழு நிலாவாக என்னுடன் சேர்ந்தாய்
கிழக்காக நீ கிடைத்தாய் விழுந்து விட்டேனே
வாசமே.............வாசமே.............(என்ன சொல்லி)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY