Chellame Chellame Konja
Sathyam
Hero Vishal
Music Director Haris Jayaraj
Lyricist Kapilan
Singers Balram,Bombay Jayashree,Sunitha Sarathy
Year 2008
Song Lyrics

செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே
என் வெல்லமே வெல்லமே கெஞ்சு என்பேனே
மின்னலில் மின்னலில் உன்னைக் கண்டேனே
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே

ஓர் ஆயிரம் மெல் சுகங்களில் கரைந்திடுவேனே
நூறு ஆயிரம் நள்ளிரவினில் உறைந்திடுவேனே….(செல்லமே)

குரலில் உன் குரலில் மெல்லிசை சுகம் அறிவது போலே
விரலில் உன் விரலில் முன்பனி சுகம் உணர்வது போலே
விழியில் உன் விழியில் மெல்லலை சுகம் தொடுவது போலே
இதழில் உன் இதழில் முக்கனி சுகம் புரிவது போலே

கூந்தலில் எனை மீது தினந்தோறும் பரிமாறு
நீ நீச்சல் குளம்போலே நெடு நேரம் இளைப்பாறு
ஓர் ஆயிரம் மெல் சுகங்களில் கரைந்திடுவேனே
நூறு ஆயிரம் நள்ளிரவினில் இறைந்திடுவேனே (செல்லமே)

வே.......... நீயோ......வே.......... நானோ
வெட்கம் வெட்கம்
வே........ நீயோ.......வே........ நானோ
நித்தம் நித்தம்

நிலவில் வெண்ணிலவில் உன்
தலை முடி கலைவது போதும்
பகலில் நண்பகலில் உன்
செவி மடல் மலர்வதும் போதும்

ஒளியில் மின்னொளியில் என்
வளையலும் இடிவது போதும்
மனதில் என் மனதில் உன்
பரவசம் நிறைவது போதும்

போதும் ஆனாலும் போதாது சந்தோஷம்
கண் தூங்கப் போனாலும் தூங்காது ஆள்வாசம்
சகாயமே உன் அருகினில் இளைப்பாறுவேனே
தடாகமே புன்முறுவலில் நனைந்திடுவேனே (செல்லமே)


COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY