Minsaram En Meedhu
Run
Hero Madhavan
Music Director Vidyasagar
Lyricist Viveka
Singers Sadhana Sargam,Haris Ragavendra,Jack Smelly
Year 2000
Song Lyrics

மின்சாரம் என் மீது பாய்கின்றதே
உன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே
உன் வார்த்தை என் பாஷை ஆகின்றதே
உள் நெஞ்சில் மின்னல் பூ பூக்கின்றதே

நீ உத்தரவிட்டால் முத்தம் தருவேன்
உதடுகள் வியர்க்கும் வரை
உண்மையில் நானும் யோக்கியன் தானடி
உன்னை பார்க்கும் வரை

காதல் செய்யே காதல் செய்யே
காதல் செய்யே காதல் செய்யே.....(மின்சாரம்)

என்னை விட இந்த உலகிலே
உன்னை மிக மிக விரும்பினேன்
உந்தன் அன்பு தரும் சுகத்தினால்
இன்னும் உயிருடன் இருக்கிறேன் ம்ஹும்

தீ கூட தின்ன தின்ன தித்திக்கும்
என்று கண்டேன்
அன்பே நீ பக்கம் வந்தாய்
புத்திக்கு ஓய்வு தந்தேன்

பெண் என்றால் மென்மை என்று
கவிதைகள் சொல்லி வந்தேன்
உன்னை நான் பார்த்த பின்தான்
கன்னத்தில் போட்டு கொண்டேன்

காதல் செய்யே காதல் செய்யே
காதல் செய்யே காதல் செய்யே

மெல்ல மெல்ல எந்தன் உயிரினை
மென்று தின்று இன்று சிரிக்கிறாய்
கொள்ளையடித்தது நீயடி
என்னை குற்றம் சொல்லி திரிகிறாய் ஆஹா

பொல்லாத இம்சை ஒன்றில்
புரியாமல் மாட்டி கொண்டேன்
இம்சைக்கு இன்னொரு பெயர்
காதல் தான் என்று கண்டேன்

அன்பே நீ அருகில் வந்தால்
என் உலகம் சுருங்க கண்டேன்
ஒரு கோப்பை தண்ணீர் காதல்
அதில் நீந்த கற்றுகொண்டேன்

காதல் செய்யே காதல் செய்யே
காதல் செய்யே காதல் செய்யே.....(மின்சாரம்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY