Poi Solla Koodadhu Kadhali
Run
Hero Madhavan
Music Director Vidyasagar
Lyricist Pa vijay
Singers Hariharan,Sadana Sargam
Year 2000
Song Lyrics

பொய் சொல்லக்கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி
கண்களால் கண்களில் தாயம் ஆடினாய்
கைகளால் கைகளில் ரேகை மாற்றினாய்
பொய் ஒன்றை ஒப்பித்தாய் ஐயையோ தப்பித்தாய்
கண்மூடித் தேடத்தான் கனவெங்கும் தித்தித்தாய் (பொய் )

அழகிய பொய்கள் பூக்கும் பூச்செடி கண்டேன்
ரகசியமாக உயிரைத் தோண்டி
பதியம் போட்டுக் கொண்டேன்
கண்டவுடன் எனையே தின்றதடி விழியே
என்னை விட்டுத் தனியே சென்றதடி நிழலே

அடி சுட்டும் விழிச்சுடரே நட்சத்திரப் பயிரே
ரெக்கை கட்டி வா நிலவே
பொய் ஒன்றை ஒப்பித்தாய் ஐயையோ தப்பித்தாய்
கண்மூடித் தேடத்தான் கனவெங்கும் தித்தித்தாய் (பொய்)

ஒரு மழை என்பது ஒரு துளிதானா கண்ணே
நீ ஒற்றைத் துளியா கோடி கடலா
உண்மை சொல்லடி பெண்ணே
கன்னக்குழி நடுவே சிக்கிக்கொண்டே அழகே

நெற்றிமுடி வழியே தப்பி வந்தேன் வெளியே
அடி பொத்தி வைத்த புயலே தத்தளிக்கும் திமிரே
வெட்கம் விட்டு வா வெளியே
நில் என்று கண்டித்தாய் உள் சென்று தண்டித்தாய்
சொல் என்று கெஞ்சத்தான் சொல்லாமல் வஞ்சித்தாய் (பொய்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY