Malarnthidum Inbam
Irumanam Kalanthal Thirumanam
Hero Prem Nazeer
Music Director S.Dakshinamurthy
Lyricist A.Maruthakasi
Singers K.Jamunarani ,A.L.Ragavan
Year 1960
Song Lyrics

மலர்ந்திடும் இன்பம் மனம் போலே இந்த

உலகினில் ஆணும் பெண்ணும் ஒன்றாய் சேர்ந்தாலே

அலை மோதுதே என்னை அறியாமலே

நெஞ்சம் நிலை மாறியே (மலர்ந்திடும்)

அலை மோதும் காரணம் நான் சொல்லவோ

சொன்னால் பரிசென்னவோ

தந்தால் அதை நான் சொல்லுவேன்

தெளிவாக என்னிடம் பேசாமலே – வீணே

பரிகாசம் செய்தால் முறையல்லவே

அலை மோதும் காரணம் நிலையான காதலாம்

என்னைப் பார் கண்ணைக் கேள்

இன்னும் என்ன சொல்ல நான் (மலர்ந்திடும்)

அரும்போடு தென்றலும் விளையாடுதே

அன்பின் நிலை நாடுதே பொங்கும் இசை பாடுதே

குறும்பான வார்த்தையே கரும்பாகுதே

ஆசை எறும்பாகுதே கொஞ்சி உறவாடுதே

இரும்போடு காந்தமே இணைகின்ற காட்சியே

இங்கே நீ பாரென்று உந்தன் கண் சொல்லுதே (மலர்ந்திடும்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY