Yaar Enna Sonnar Yenintha
Ilaya Thalaimurai
Hero Sivajiganesan
Music Director M.S.Viswanathan
Lyricist Kannadasan
Singers T.M.Soundarajan
Year 1977
Song Lyrics

யார் என்ன சொன்னார் ஏனிந்த கோபம்
நீ கொண்ட மௌனம் நான் செய்த பாவம்
தேர் முன்பு செல்ல சிலை பின்பு சென்றால்
ஊர்கோலம் என்று பேரோ

திண்டாடும் இடை கொண்டாடும் எனை
கண்டோடும் நிலையாதோ
ஸ்ரீரங்கநாதன் பார்க்கும்போது
கோவிலில் இல்லை ஸ்ரீதேவி மாது

ஸ்ரீராமன் முன்னே வைதேகி பின்னே
இடம் மாற நேர்ந்தால் பரிதாபம் பரிதாபம் (யார் என்ன)

அந்த நாளில் வஞ்சி கொண்ட
ஆசை மாறக் கண்டேன்
இந்த நாளில் பெண்மை ஏனோ
வேஷம் போடக் கண்டேன்

நில்லடி கொஞ்சம் வேதனை போதும்
சொல்லடி கண்ணே சோதனை போதும்
இக்கரைமீது ஏங்குகின்றேனே
அக்கைறை இல்லையோ பரிதாபம் பரிதாபம் (யார் என்ன)

காவேரி வெள்ளம் கரை மீறி போனால்
நஞ்சைகளின் கதி என்னவோ
கண்ணான உள்ளம் புண்ணாகுமானால்
காதல் போகும் திசை என்னவோ

பூப்போன்ற பெண்மை போர்க்களமானால்
மென்மையும் இல்லை நன்மையையும் இல்லை
கல்லாக நீயும் கனியாக நானும்
ஏன் வாழ வேண்டும் பரிதாபம் பரிதாபம் (யார் என்ன)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY