Singara Therkooda Thirai
Ilaya Thalaimurai
Hero Sivajiganesan
Music Director M.S.Viswanathan
Lyricist Kannadasan
Singers T.M.Soundarajan
Year 1977
Song Lyrics

சிங்காரத் தேர் கூடத் திரை போட்டு போகும்
அது கூட உணகில்லையே –அம்மம்மா
செவ்வானம் தனை கூட மேகங்கள் மூடும்
மூடாத வெண் முல்லையே (சிங்கார)

முத்துக்கள் சிப்பிக்குள் இருந்தால் என்ன
மொட்டுக்கள் இலைக்குள் மறைந்தால் என்ன
கட்டுக்குள் மேனியை வைத்தால் என்ன
கல்லைப்போல் இல்லாமல் கனிந்தால் என்ன

அட.....வாழைத்தண்டு காலைக் கொஞ்சம்
சேலைச் சுற்றி வைத்தால் என்ன
வண்ணச் சிட்டு சாந்துப்பொட்டு வைத்தால் என்ன (சிங்கார)

தண்டைக்கு கால்களில் இடமில்லையோ
கொண்டைக்கு கூந்தலில் வழியில்லையோ
மஞ்சள்தான் மங்கைக்கு மணமில்லையோ
மையிட்டால் கண்ணுக்கு அழகில்லையோ

அம்பாளைக் கண்ணாரக் கண்டு பெண்மை
கொண்டால் நன்மையுண்டு
நாணம் கொண்டு வெட்கம் கொண்டு நடந்தால் என்ன (சிங்கார)

வாஷிங்டன் பெண்ணுக்கு கண்டாங்கியாம்
வாசலில் கண்ணனின் திருக்கோயிலாம்
கீதையும் சீதையும் அங்கே கண்டார்
போதையும் வாதையும் இங்கே தந்தார்

நம் தென்னாட்டு பண்பாடு ஒன்று
அன்பு பாசம் இன்பம் என்று
தாய்மை இங்கே பேயானால் தாங்காதம்மா (சிங்கார)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY