Kettaye Oru Kelvi Naan
Ilaya Thalaimurai
Hero Sivajiganesan
Music Director M.S.Viswanathan
Lyricist Kannadasan
Singers T.M.Soundarajan
Year 1977
Song Lyrics

கேட்டாயே ஒரு கேள்வி நான்
வார்த்தையில் பதில் சொல்ல முடியாது
அமைதியிலே நான் அரும்பாவேன்
ஆசையில் எழுந்தால் இரும்பாவேன்

சுகமோ சுகம் என கரும்பாவேன்
சொர்க்கத்தில் ஆனந்த விருந்தாவேன் (கேட்டாயே)

முந்தானை மேனியில் பந்தாடும் அழகினை
கண்டாலும் நான் ஒரு கவிதை சொல்வேன்
வந்தாடும் தென்றலில் பந்தாடும் இடையினை
தந்தாலும் நான் அதை தழுவிக் கொள்வேன்

அம்மாடி எனக்கது புதியக் கதை
ஆனாலும் தான் இந்த இனிய சுவை
மானாக பிறந்தது பருவச்சிலை
நீயாக தருவதில் தடைகள் இல்லை (கேட்டாயே)

அத்தாணி மண்டபம் அத்தானைக் கண்டதும்
தட்டாமல் கதவுகள் திறக்கின்றன
ஆனந்த பூக்களில் தேன் வந்த வேகத்தில்
அங்கங்கள் படகென மிதக்கின்றன

செந்தூர முகத்தினில் துறுதுறுப்பு
செம்மாந்த மார்பினில் பரபரப்பு
ஆரம்ப காதலின் சுவை அறிந்து
ஆனந்தம் தேடுது அணை உடைந்து (கேட்டாயே)

ராசாத்தி பூஞ்சிட்டு ராஜாவின் கைபட்டும்
பேசாமல் இருப்பதின் பொருள் என்னவோ
பேசாமல் இருப்பதில் லேசான சுகம் உண்டு
பெண் பாடும் பேரின்பம் அதுவல்லவோ

கேளாமல் கேட்டது நடக்கின்றது
பாராமல் பார்த்தது இனிக்கின்றது
சேராமல் சேர்ந்தது சுவைக்கின்றது
தீராமல் சுகம்பெற அழைக்கின்றது (கேட்டாயே)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY