Arai Koduthal Theriyum
Ilaya Thalaimurai
Hero Sivajiganesan
Music Director M.S.Viswanathan
Lyricist Kannadasan
Singers T.M.Soundarajan
Year 1977
Song Lyrics

அறைக் கொடுத்தால் தெரியும் – இவன்
அடக்கமென்ன பழக்கமென்ன
மயக்கமென்ன மகிமை என்ன ஓர்
அறைக் கொடுத்தால் தெரியும்

அந்த அறை பள்ளியறையாக இருந்தால்
இந்த அறைக் கூட அங்கு இன்பம் தருமே – நான்
என்ன சொன்னால் ஆடவருக்கு கோபம் வருமோ
அதைச் சொன்னேன் இனியாவது மோகம் வருமோ

இளமையில் சந்திரன் வலிமையில் அர்ச்சுனன்
வாலிபம் என்பது கேள்வியில் மாத்திரம் புரியாதம்மா (ஒரு அறை)

நாணம் உண்டு அச்சம் உண்டு பாவை எனக்கு
நாணமின்றி கேட்பதொரு காதல் கிறுக்கு – நான்
அல்லி மகள் போலிருக்க ஆசைக் கொண்டேன்
அதனாலே அர்ச்சுனனுக்குக் கோபம் கொடுத்தேன்

இதுவரை போதுமா மணவறை வேண்டுமா
இன்னொரு அறை உண்டு
என்னது என்பதை நான் சொல்லவா நான் சொல்லவா
நான் சொல்லவா ..........சொல்லவா

அந்த அறை பள்ளியறையாக இருந்தால்
வந்தவரை இன்பமென்று வாங்கிக் கொள்ளுமே –ஓர்
ஊடலுண்டு காவியத்தில் நீ அதைக் கொண்டாய் – இது
கூடலுக்கு வாசமென்று நான் அதைக் கண்டேன்

ஆ.........ஓஹோ.......ஆ........ஓஹோ...........

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY