Odukira Thanniyila
Achamillai Achamillai
Hero Rajesh
Music Director V.S.Narasimhan
Lyricist Vairamuthu
Singers P.Suseela,Malasiya Vasudevan
Year 1984
Song Lyrics

மேகத்த தூது விட்டா திசை மாறி போகுமோன்னு

தாகம் உள்ள மச்சானே தண்ணிய நான் தூது விட்டேன்

தண்ணிக்கு இந்த கன்னி தந்தனுப்பும் முத்தமெல்லாம்

எண்ணிக்கை குறையாம எப்ப வந்து தரப்போற

எப்ப வந்து தரப்போற


ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த

சேர்ந்திச்சோ சேரலையோ செவத்த மச்சான் நெத்தியிலே

ஓலை ஒண்ணு நான் எழுதி ஓடவிட்டேன் தண்ணியில

சேர்ந்திச்சோ சேரலையோ செவ்வத்த மச்சான் கைகளிலே (ஓடுகிற)


அடி கிராமத்து கிளியே என் கிழியாத தாவணியே

குளிரெடுக்கும் சாரலுக்கு கொடை பிடிக்க வா மயிலு

கொடையும் இல்ல படையுமில்ல கூடலுக்கு ஆதரவா தாவணிய

நீ புழிய தல துவட்ட நான் வரவா


நீ நெனச்ச ஆடையெல்லாம் நீ புழிஞ்சா நீர் வடியும்

அயித்த மகன் நான் புழிஞ்ச அத்தனையும் தேன் வடியும் (ஓடுகிற)


மலர் தோட்டத்துக் குயிலு இது உமக்காக பாடுதுங்க

ஆசைய நான் தூது விட அருவி ஒரு பாலமுங்க

அருவி போல அழுகிறேனே அறிந்துக்கொண்டால் ஆகாதோ

முந்தானையில் ஓரம் என்னை முடிந்துக் கொண்டால் ஆகாதோ

வக்கணையா தாலி வாங்கி வாசலுக்கு வாரதெப்போ –ஒங்க

பாதம் பட்ட மண்ணெடுத்து நான் பல்லு வெளக்க போறதெப்போ (ஓடுகிற)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY