Eera Vizhikalai Moodi
Aravinthan
Hero Sarathkumar
Music Director Yuvan shankar raja
Lyricist Vairamuthu
Singers SP. Balasubramaniam,Shobana
Year 1997
Song Lyrics

ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே
மார்கழியில் மலர்களில் வண்டு போர்வைகள் தேடுதே
விழி நான் மூடியதும் என் தூக்கம் ஆனவள் நீ
அழகே கை சேரும் நேரம் சொந்தம் இன்பம் (ஈர நில)

நீருக்கு நிறம் ஏது நேசத்தில் பேதம் வராது
உன் அன்பில் அழுதாலும் கண்ணீர் இனிக்கும்
முள் மீது என் பாதை பூவாகும் உந்தன் பார்வை
நீ பாடும் தாலாட்டில் சோகம் உறங்கும்

நம்மை விழி சேர்த்ததோ இல்லை
விதி சேர்த்ததோ – உள்ளம்
ஒன்றானதே போதும் இன்பம் போதும் (ஈர நிலா)

தாயான பூ மாது தோள் மீது சாய்ந்திடும்போது
என் நெஞ்சில் பாலூறும் அன்புத் தவிப்பு
தலைமுறை கண்டாலும் தாளாது உந்தன் அன்பு
எப்போதும் வேண்டும் உந்தன் இன்ப அணைப்பு
சேரும் நதி ஒன்றுதான் பாதை இனி ஒன்றுதான்
வெள்ளை மழை மண்ணிலே கூடும் வண்ணம் சூடும் (ஈர நிலா)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY