Ilampanithuli Vizhum Neram
Aarathanai
Hero Suman
Music Director Ilayaraja
Lyricist Vairamuthu
Singers Radhika
Year 1981
Song Lyrics

லலலல லலலல லாலா..லலலல லலலல லாலா..

இளம் பனித்துளி விழும் நேரம்..
இலைகளில் மகரந்தக் கோலம்
துணைக்கிளி தேடி துடித்தபடி..
தனிக்கிளி ஒன்று தவித்தபடி
சுடச்சுட நனைகின்றதே (இளம்)

ஆசை நதி மடை திறக்கும் பாஷை வந்து கதவடைக்கும்
காயாது மன ஈரங்கள்.. தாளாது சுடு பாரங்கள்
காவியக் காதலின் தேசங்களே ஊமையின் காதலைப் பேசுங்களே
மலர்களும் சுடுகின்றதே தனானா.. (இளம்)

பாவை விழித்துளி விழுந்து பூவின் பனித்துளி நனையும்
தீயாகும் ஒரு தேன் சோலை.போராடும் ஒரு பூமாலை
சூரிய காந்திகளாடியதோ சூரியனை அது மூடியதோ
முகில் வந்து முகம் பொத்துமோ தனானா.. (இளம்)

லலலல லலலல லாலா.. லலலல லலலல லாலா..

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY