Anbulla Athan Vanakkam
Kairasi
Hero Gemini Ganesan
Music Director R.Govarthanam
Lyricist Kannadasan
Singers P.Suseela
Year 1960
Song Lyrics

அன்புள்ள அத்தான் வணக்கம் –உங்கள்

ஆயுளைக் கொண்டாள் மயக்கம்

தென்னவர் கையிருக்கும் திருவாளைப் போலிருக்கும்

கண்ணிருந்தும் இல்லை உறக்கம் (அன்பு)


மாலைப் பொழுது வந்து படைப்போல் கொல்லும்

வருவார் வருவார் என்ற சேதியும் சொல்லும்

ஆலிலை போன்ற உடல் ஆசையில் துள்ளும்

அந்தியிலே இயற்கை என்னையும் வெல்லும் (அன்பு)


பருவம் நிறைந்திருந்தும் எனக்கென்ன சுகமே

பருகும் இதழிரண்டு இருந்தென்ன பயனே

கரங்கள் இரண்டிருந்தும் அணைப்பதற்கில்லை

கண்ணா இனி நான் பொறுப்பதற்கில்லை (அன்பு)


பொன் மணிமேகலை பூமியில் வீழும்

புலம்பும் சிலம்பிரண்டும் எனைவிட்டு ஓடும்

கைவளை சோர்ந்து விடும் கண்களும் மூடும்

காண்பவர் உங்களைத்தான் பழிச்சொல்ல நேரும்

அன்புள்ள அத்தான் வணக்கம்

திருமணம் ஆகுமுன் வேண்டாம் குழப்பம் (அன்பு)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY