Thirumal Perumaikku
Thirumal Perumai
Hero Sivaji Ganesan
Music Director K.V.Mahadevan
Lyricist Kannadasan
Singers T.M.Soundarajan
Year 1968
Song Lyrics

திருமால் பெருமைக்கு நிகரேது - உன்றன்
திருவடி நிழலுக்கு இணையேது!
பெருமானே உன்றன் திருநாமம் - பத்து
பெயர்களில் விளங்கும் அவதாரம் (திருமால்)

கடல் நடுவே வீழ்ந்த சதுர்வேதம் - தனைக்
காப்பதற்கே கொண்ட அவதாரம் -- மச்ச அவதாரம்!
அசுரர்கள் கொடுமைக்கு முடிவாகும் - எங்கள்
அச்சுதனே உன்றன் அவதாரம் -- கூர்ம அவதாரம்!

பூமியைக் காத்திட ஒரு காலம் -நீ
புனைந்தது மற்றொரு அவதாரம்-- வராக அவதாரம்!
நாராயணா என்னும் திருநாமம் - நிலை
நாட்டிட இன்னும் ஒரு அவதாரம்-- நரசிம்ம அவதாரம்!

மாபலிச் சிரம் தன்னில் கால் வைத்து - இந்த
மண்ணும் விண்ணும் அளந்த அவதாரம்-- வாமன அவதாரம்!
தாய் தந்தை சொல்லே உயர் வேதம் - என்று
சாற்றியதும் ஒரு அவதாரம்-- பரசுராம அவதாரம்!

ஒருவனுக்கு உலகில் ஒரு தாரம் - எனும்
உயர்வினைக் காட்டிய அவதாரம் -- ராம அவதாரம்!
ரகு குலம் கொண்டது ஒரு ராமன் - பின்பு
யது குலம் கண்டது பலராமன்-- பலராமன்

அரசு முறை வழிநெறி காக்க - நீ
அடைந்தது இன்னொரு அவதாரம்-- கண்ணன் அவதாரம்

விதி நடந்ததென மதி முடிந்ததென
வினையின் பயனே உருவாக,
நிலை மறந்தவரும், நெறியிழந்தவரும்
உணரும் வண்ணம் தெளிவாக,
இன்னல் ஒழிந்து புவி காக்க - நீ
எடுக்க வேண்டும் ஒரு அவதாரம் - கல்கி அவதாரம்!

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY