Malargalile Pala Niram

Hero | Sivaji Ganesan |
Music Director | K.V.Mahadevan |
Lyricist | Kannadasan |
Singers | T.M.Soundarajan |
Year | 1968 |
Song Lyrics
மலர்களிலே பல நிறம் கண்டேன் – திரு
மாலவன் வடிவம் அதில் கண்டேன்
மலர்களிலே பல மணம் கண்டேன்- அதில்
மாதவன் கருணை மனம் கண்டேன் (மலர்)
பச்சை நிறம் அவன் திருமேனி
பவள நிறம் அவன் செவ்விதழே
மஞ்சள் நிறம் அவன் தேவி முகம்
வெண்மை நிறம் அவன் திரு உள்ளம் (மலர்)
பக்தி உள்ளம் என்னும் மலர் தொடுத்து
பாசமென்னும் சிறு நூலெடுத்து
சத்தியமென்னும் சரம் தொடுத்து – நான்
சாற்றுகின்றேன் உன் திருவடிக்கு (மலர்)
நானிலம் நாராயணன் விளையாட்டு
நாயகன் பெயரில் திருப்பாட்டு
ஆயர்க்குலப் பிள்ளை விளையாட்டு –இந்த
அடியவர் என்றும் அருள் கூட்டு (மலர்)

COMPILED AND UPDATED BY