Karaiyeri Meen Vilayadum
Thirumal Perumai
Hero Sivaji Ganesan
Music Director K.V.Mahadevan
Lyricist Kannadasan
Singers P.Suseela
Year 1968
Song Lyrics

கரையேறி மீன் விளையாடும் காவிரி நாடு – எங்கள்

உறையூரின் காவலரே நீ வாழிய நீடு

கொடியேற்றி புலி விளையாட குன்றேறி புகழ் விளையாட

மடியேறி மழலையர் ஆடும் மன்னவன் வாழ்க – பொன்னை

வரையாமல் வாரி வழங்கும் தென்னவன் வாழ்க (கரையேறி)


கொஞ்சும் தமிழ் புலவர்கள் கவிதை பாட

தா தா நி தா நி பா நி தா ம நி தா தா

கோபுரக் கலையில் சிற்பங்கள் நடனமாட

நீ நீ நி நி நி தா ஸ நி தா ம நி தா ஸா ஸா

அஞ்சும் பகைவர் அஞ்சி நடுங்கி ஓட

ரீ ரீ க ரி க ஸ க ரி நி ரி ஸ த நி ஸ க ரி

அன்னக் கொடியார் மங்கலம் பாட

வாழிய நீடு..................காவிரி நாடு......... (கரையேறி)


முத்து பந்தல் கட்டி மண்டபம்

முன்னும் பின்னும் மரகத வாசல்

இரத்தின மகுடம் நவமணியோடு

நால்வகை சேனை நலம் பெறும் நாடு

கன்னியர் இடையும் வண்ணக் கொடியும்

அன்னம்போல் வரும் அழகிய நடையும்

தென்றலில் ஆடும் தென்னவன் நாடு

தித்தித்திருக்கும் முத்தமிழ் வீடு

வாழிய நீடு..................காவிரி நாடு......... (கரையேறி)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY