Hari Hari Gokula Ramana
Thirumal Perumai
Hero Sivaji Ganesan
Music Director K.V.Mahadevan
Lyricist Kannadasan
Singers T.M.Soundarajan,P.Suseela,Master Maharajan
Year 1968
Song Lyrics

ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா ஸ்ரீ
ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா!

பாரத தேவா பாண்டவர் நேசா
பதமலர் பணிந்தோமே - உன்
பதமலர் பணிந்தோமே! (ஹரி ஹரி )

ஞான மலர்க் கண்ணா, ஆயர்க் குல விளக்கே
வானமும் கடலும் வார்த்து எடுத்த பொன் உருவே
கானத்தில் உயிர் இனத்தைக் கட்டுவிக்கும் கண்ணா!

தானே உலகாகி தனக்குள்ளே தான் அடங்கி
மானக் குல மாதர் மஞ்சள் முகம் காத்து
வாழ்விப்பாய் என்றும் மலர்த்தாள் கரம் பற்றி
நானும் தொழுதேன் நம்பி பரந்தாமா - உன்
நாமம் உரைக்கின்ற நல்லோர் நலம் வாழியவே

ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா!



COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY