Kurinjimalaril Vazhiyum Rasathai
Azhage Unnai Aarathikkiren
Hero Vijayakumar & Jaiganesh
Music Director Ilayaraja
Lyricist Vali
Singers SP. Balasubramaniam,Vani Jayaram
Year 1979
Song Lyrics

குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
உறிஞ்ச துடிக்கும் உதடு இருக்க
ஓடியதென்ன பூவிதழ் மூடியதென்ன
என் மனம் வாடியதென்ன

ஒரு மாலையிடவும் சேலை தொடவும்
வேளை பிறந்தாலும் அந்தி மாலை பொழுதில்
லீலை புரியும் ஆசை பிறக்காதோ (குறிஞ்சி)

மேள தாளம் முழங்கும் முதல் நாள் இரவு
மேனி மீது எழுதும் மடல் தான் உறவு
தலையில் இருந்து பாதம் வரையில் தழுவி கொள்ளலாம்
அதுவரையில் நான்.. அதுவரையில் நான்
அனலில் மெழுகோ
அலைக் கடலில் தான் அலையும் படகோ

குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
உறிஞ்ச துடிக்கும் உதடு இரண்டும்
வாடியதென்ன பூவிதழ் தேடியதென்ன
என்னிடம் நாடியதென்ன

ஒரு மாலையிடவும் சேலைத் தொடவும்
வேளை பிறக்காதோ அந்த வேளை வரையில்
காளை உனது உள்ளம் பொறுக்காதோ

காற்று வந்து தொடத்தான் கொடியே இருக்க
கடலில் வந்து விழத்தான் நதியே பிறக்க.
இடையில் வந்து தடைகள் சொல்ல எவரும் இல்லையே
பிறர் அறியாமல்.......பிறர் அறியாமல்
பழகும் போது பயம் அறியாத இதயம் ஏது

வீணை மீது விரல்கள் விழுந்தால் ராகம்
ராகம் நூறு ரகங்கள் விளைந்தால் யோகம்
உனது ராகம் உதயம் ஆகும் இனிய வீணை நான்
சுதி விலகாமல் இணையும் நேரம்
சுவைக் குறையாமல் இருக்கும் கீதம் (குறிஞ்சி)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY