Vetri Petra Mamanukku
Ellorum Innattu Mannargal
Hero GEMINI
Music Director T.G.Lingappa
Lyricist Ku.Ma.Balasubramaniyam
Singers P.Suseela,K.Jamunarani
Year 1960
Song Lyrics

வெற்றி பெற்ற மாமனுக்கு வீர வாழ்த்துப் பாடுங்கடி

வேப்பமாலை போடுங்கடி

விலகி நின்னே ஆடுங்கடி அங்கே

வெட்டி வெட்டி குவிச்சுப் போட்ட

விவரமெல்லாம் கேளுங்கடி (வெற்றி)


வாளேந்தி போராடும் சிங்கமடி – ஆனா

வாலு மட்டும் பின்னாலே தொங்காதடி

வணங்காமுடி இவர்தானடி

வல்லமை எல்லாம் சொல்லுங்கடி

வரிசையிலே நில்லுங்கடி

பூசணிக்காய தலைக்கு சுத்தி

பொத்தென்று கீழே போடுங்கடி (வெற்றி)


ஆங்காரப் பேச்சோடு போனாரடி –பூசை

தாங்காம தள்ளாடி வந்தாரடி

அலுங்காமலே நெருங்காமலே

ஐயா முதுகப் பாருங்கடி

அகலம் பண்ணது யாருங்காடி

அரைச்ச மஞ்சள் கொதிக்க வெச்சு

அள்ளி அள்ளி பூசுங்கடி (வெற்றி)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY