Vishayam Onnu Solla
Ellorum Innattu Mannargal
Hero GEMINI
Music Director T.G.Lingappa
Lyricist Pattukottai Kalyanasundaram
Singers K.Jamunarani ,M.S.Rajeswari
Year 1960
Song Lyrics

விஷயம் ஒண்ணு சொல்லப்போறேன் கேளடி கேளு-உண்மை

வெளியாகும் நேரம் வந்தது கேளடி கேளு

நடந்தது எல்லாம் தேவையில்லை தள்ளுடி தள்ளு –இனி

நடக்கபோற சங்கதியத்தான் சொல்லடி சொல்லு


வறுமையில்லே வாட்டமில்லே வயிற்றிலடிக்கும் கூட்டமில்லே

வறுமையில்லே வாட்டமில்லே வயிற்றிலடிக்கும் கூட்டமில்லே

கொடுமையெல்லாம் மாறி வருது கேளடி கேளு

குடிசையைத்தான் இன்பம் நாடி வருது கேளடி கேளு


நல்லவர் போல உலகம் மீது நரியும் கழுகும் உலவும்போது

நம்மை இன்பம் நாடி வருமா சொல்லடி சொல்லு

நடந்தது எல்லாம் தேவையில்லை தள்ளுடி தள்ளு –இனி

நடக்கபோற சங்கதியத்தான் சொல்லடி சொல்லு


ஏமாத்தும் போர்வையிலே ஏழைகளின் வேர்வையிலே

எக்காளம் போடுற கூட்டம் நாட்டில்

எதித்துக் கிட்டு எடுக்கணும் ஓட்டம்

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY