Ennarumai Kathalikku
Ellorum Innattu Mannargal
Hero GEMINI
Music Director T.G.Lingappa
Lyricist Pattukottai Kalyanasundaram
Singers T.M.Soundarajan
Year 1960
Song Lyrics

என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே – நீ

இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே (என்)


கண் விழிக்கும் தாரைகையோ வெண்ணிலாவே –உன்னை

காவல் காக்கும் தோழியரோ வெண்ணிலாவே

கன்னத்தில் காயம் என்ன வெண்ணிலாவே –உன்

காதலன்தான் கிள்ளியதோ வெண்ணிலாவே (என்)


கள்ளமில்லா என் இதயம் வெண்ணிலாவே – ஒரு

கள்ளியிடம் இருக்குதடி வெண்ணிலாவே –அந்த

வஞ்சிதனை நீ அறிவாய் வெண்ணிலாவே –அதை

வாங்கி வந்து தந்துவிடு வெண்ணிலாவே (என்)


கெஞ்சினால் தரமாட்டாள் வெண்ணிலாவே –நீ

கேட்காமல் பறித்து விடு வெண்ணிலாவே

அஞ்சிட தேவையில்லை வெண்ணிலாவே –இது

அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே (என்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY