Thannnaithan Nambathathu
Deivapiravi
Hero Sivaji Ganesan
Music Director R.Sudharsanam
Lyricist Thanjai Ramaiya Dass
Singers C.S.jayaraman
Year 1960
Song Lyrics

தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் - அதற்கு
சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்
சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்
தானே நம்பாதது சந்தேகம்

மானாபிமானந்தன்னை மறைவாக்கும் - நல்ல
மாண்புடைய மக்களை மடையராக்கும் - மனித
வீணான யோசனைக்கே இடமாக்கும் - பல
விபரீத செயல்களை விளைவாக்கும் (தன்னைத்)


ஓரிடம் நிலையாக நில்லாத ரதம் போலே ஏ..ஏ
உள்ளத்தை ஒடவிடும் - பின்னும்
சேரும் இடம் வந்து சேராத ஓடமாய்
திசை மாறச் செய்து விடும்
ஊரார் சொல் பொய்யதனை ஊட்டிவிடும் - உண்மை
உரைப்பார் சொல் தப்பெனவே விலக்கிவிடும் - மனம்
மாறாத காதலர்க்குள் பகைமை மூட்டி விடும்
மனிதனை விலங்காக்கிடும் (தன்னைத்)

ஞானோதயம் குறைந்தால் தொத்தும் ரோகம்
நம்பிக்கை அற்றவர்க்கே துன்பமாகும் - சுத்த
ஆணோடு பெண்ணிடமும் வரும் போகும் - அதற்கு
ஔஷதம் ஒன்றே தான் நல் விவேகம் (தன்னைத்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY